சென்னை
நேற்று பிர்பல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் மரணம் அடைந்தார்.
உமா ரமணன் ஒரு திரைப்பட பின்னணி பாடகி ஆவார். இவர் சென்னை அடையாறில் வசித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக உடல் நிலை குன்றி இருந்த நிலையில் நேற்று காலமானார். சுமார் 69 வயதாகும் உமா ரமணனின் மறைவால், இசை ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உமா ரமணன் கடந்த 1980 ஆம் ஆண்டு வெளியான ‘நிழல்கள்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பூங்கதவே தாழ் திறவாய்’ என்ற பாடல் மூலம் பாடகியாக திரை உலகில் உமா ரமணன் அறிமுகமானார். அந்த பாடலை இளையராஜா இசையில் தீபன் சக்ரவர்த்தி உடன் இணைந்து அவர் பாடி இருந்தார்.
இதைதவிர உமா ரமணன் கேளடி கண்மணி, தூறல் நின்னு போச்சு, வைதேகி காத்திருந்தாள், தில்லுமுல்லு, பன்னீர் புஷ்பங்கள், முதல் வசந்தம், ஒரு கைதியின் டைரி, புதுமைப் பெண், தென்றலே என்னை தோடு, திருப்பாச்சி உள்ளிட்ட பல படங்களில் பின்னணி பாடல்களைப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.