டெல்லி

திகார் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரத்த சர்க்கரை அளவு 320ஐ எட்டியதால் ஊசி மூலம் இன்சுலின் வழங்கப்பட்டுள்ளது. 

அமலாக்கத்துறையா டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு உள்ளது. கெஜ்ரிவால் நீரிழிவு நோயாளி என்பதால் சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

அவருக்கு இன்சுலின் ஊசி, வீட்டில் சமைத்த உணவு போன்றவற்றை வழங்க சிறை நிர்வாகம் மறுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.  எனவே இதைத்தொடர்ந்து கெஜ்ரிவாலை சிறையில் கொலை செய்யச் சதி நடப்பதாக ஆம் ஆத்மி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதைச் சிறை நிர்வாகம் மறுத்து உள்ளது.

தனது உடல்நிலை தொடர்பாக ஆலோசனை பெற தனது மருத்துவருடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேச அனுமதி கோரி டெல்லி நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதி காவேரி பவேஜா நேற்று விசாரித்தார். அவர் அப்போது கெஜ்ரிவாலின் கோரிக்கையை அவர் நிராகரித்தார்.

கெஜ்ரிவாலுக்கு ரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்க இன்சுலின் ஊசி அவசியமா? என்பதை ஆய்வு செய்யவும், அவரது பிற உடல்நலப் பிரச்சினைகளைப் பரிசோதிக்கவும் மருத்துவக்குழு ஒன்றை அமைக்குமாறு எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

நேற்று இரவு கெஜ்ரிவாலுக்கு வு இன்சுலின் ஊசி செலுத்தப்பட்டுள்ளது. அவருக்கு ரத்த சர்க்கரை அளவு 320- ஐ தாண்டியதால் இன்சுலின் மருந்து செலுத்தப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.இது கெஜ்ரிவால் சிறை சென்ற பின்னர் வழங்கப்படும் முதல் இன்சுலின் ஊசி இது என்பது குறிப்பிடத்தக்கது.

கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டதை திகார் சிறை நிர்வாகமும் உறுதி செய்துள்ளது. கெஜ்ரிவாலுக்கு மருத்துவர்களின் ஆலோசனைப்படி 2 யூனிட்டுகள் இன்சுலின் மருந்து செலுத்தப்பட்டதாக திகார் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.