தமிழக வீரர் நடராஜன் மிகப்பெரிய கடின உழைப்பாளி என்று ஐதராபாத் அணியின் அனுபவ வீரர் புவனேஷ்வர் குமார் பாராட்டியுள்ளார்.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இந்த போட்டியில் வென்றதன் மூலமாக ஐதராபாத் அணி 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
டெல்லி – ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியில் வெறும் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருக்கிறார் நடராஜன்.
இதுகுறித்து ஐதராபாத் அணியின் புவனேஷ்வர் குமார் பேசுகையில், நடராஜன் மிகப்பெரிய மேட்ச் வின்னர் அவரது யார்க்கர் பந்துகள் குறித்து அனைவருக்கும் நன்றாக தெரியும்.
அவர் எப்போதும் அமைதியாக இருப்பார் ஆனால் கடின உழைப்பாளி அவரின் உழைப்பு பல நேரங்களில் அங்கீகரிக்கப்படுவதில்லை என்று கூறினார்.