சென்னை

மிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தேர்தல் நேரத்தில் கூடுதலாக 10 கம்பெனி துணை ராணுவப்பாதுகாப்பு தேவை எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களிடம்,

”தமிழகத்தில் மக்களவைத் தோ்தலை அமைதியாகவும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை இன்றியும் நடத்த வசதியாக 190 கம்பெனிகளைச் சோ்ந்த துணை ராணுவப் படையினா் வந்துள்ளனா். மேலும், 10 கம்பெனி துணை ராணுவப் படையினரை அனுப்பி வைக்க வேண்டுமெனக் கோரி, இந்திய தோ்தல் ஆணையத்துக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

விரைவில்  இதுகுறித்து தோ்தல் ஆணையம் முடிவெடுக்கும். 

தபால் வாக்குகள்: தபால் வாக்குகளைப் பதிவு செய்வதற்காக 61 ஆயிரத்து 135 காவல்துறையின்ற் விண்ணப்பித்துள்ளனா். அவா்களில் 26 ஆயிரத்து 247 போ் தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள சேவை மையங்களில் தபால் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனா். தபால் வாக்குகள் 100 சதவீதம் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதில் தோ்தல் ஆணையம் தெளிவாக உள்ளது.” 

என்று தெரிவித்துள்ளார்..