துரை

டிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் நேற்று மதுரையில் திமுக கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

நேற்று மதுரை ஆனையூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர்  நடிகர் கமலஹாசன் பிரசாரம் மேற்கொண்டார்.

கமலஹாசன் தனது உரையில்,

“மதுரையை ஒரு பெரிய நகரமாக மாற்றிய பெருமை கலைஞர் கருணாநிதியைச் சேரும். மதுரையை மாநகராட்சியாக அவர் உயர்த்தினார். உயர்நீதிமன்றத்தின் கிளையை மதுரையில் தொடங்கி வைத்தார். புகழ்மிக்க பாலங்கள் மதுரையை ஒரு நவீன நகரமாக மாற்றியது என்றால் மிகையாகாது.

மதுரையில் கீழடி அருங்காட்சியகம், கலைஞர் நூற்றாண்டு நூலகம், ஜல்லிக்கட்டு அரங்கம் என பல்வேறு திட்டங்களை மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். கீழடியில் இருந்த கலாச்சாரம் வெறும் தமிழர்களின் கலாச்சாரம் மட்டுமல்ல. அது மனிதர்களின் கலாச்சாரம். அதை போற்றி பாதுகாக்க வேண்டியது நம் கடமை.

தி.மு.க.வையும், மதுரையையும் பிரிக்க முடியாது. தொண்டு செய்தவர்களையும், மக்களையும் பிரிக்க முடியாது. நல்லவர்கள் கையில் ஆட்சி கிடைக்க வேண்டும். நம்மை பிரிப்பதற்குப் பல சக்திகள் இருக்கின்றன. கல்விதான் நம் பலம்.”

எனத் தெரிவித்தார்.