சென்னை: பழனியில் பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் தலைமறைவாக இருந்து வந்த முன்னாள் பா.ஜ.க மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன் தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சாமிநாதபுரம் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் காலை உணவுத் திட்ட பொறுப்பாளராக அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வேலை செய்து வந்தார். அந்த பெண் பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக முன்னாள் செயலாளர் மகுடீஸ்வரன் மங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சாமிநாதபுரம் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் காலை உணவுத் திட்ட பொறுப்பாளராக அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வேலை செய்து வந்தார். அப்போது அங்கு வந்த பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மகுடீஸ்வரன் மீது காவல்நிலையத்தில் பாலியல் புகார் தெரிவித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் மகுடீஸ்வரன் மீது மானபங்கம் செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனிடையே பாலியல் புகாரில் சிக்கி தலைமறைவாக இருந்த மகுடீஸ்வரன் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் ஒன்றிய பார்வையாளர் பொறுப்புகளில் நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் மகுடீஸ்வரனை போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில், அவர் கர்நாடக மாநிலம் மங்களூரில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு சென்று திண்டுக்கல் போலீசார், அங்கு பதுங்கி பாஜக முன்னாள் செயலாளர் மகுடீஸ்வரனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரை விசாரணைக்கு தமிழ்நாடு அழைத்து வருகின்றனர்.