சென்னை: பணப்பட்டுவாடா புகார்கள் தொடர்பாக சென்னையில் 5 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள், அரசியல் கட்சியினர்என பல வருமான வரியை முறையாக தாக்கல் செய்யாத நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் தொடர்ச்சியாகச் சோதனை நடத்தி வருகிறார்கள். தற்போது நாடாளுமன்ற தேர்தலையொட்டி, சில பகுதிகளில் அரசியல் கட்சியினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று சென்னையில் 5 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சர் சேகர்பாபு குடியிருக்கும் சென்னை ஓட்டேரி உள்பட சில பகுதிகளில் இன்று அதிகாலை காலை முதல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.