சென்னை
நாளை சென்டிரல் ரயில் நிலையத்தில் இரவு நேர மின்சார ரயில்கள் பராமரிப்புப் பணி காரணமாக ரத்து செய்யப்படுகின்றன.

நேற்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
”சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் சென்னை சென்டிரல் – கும்மிடிப்பூண்டி இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் 2 ஆம் தேதி இரவும் 3 ஆம் தேதியும் ரத்து செய்யப்படுகிறது. அதாவது கும்மிடிப்பூண்டியில் இருந்து நாளை இரவு 8.15 மணி, 9.15 மணிக்கு சென்டிரல் செல்லும் மின்சார ரயில், மறுமார்க்கமாக சென்டிரலில் இருந்து இரவு 9.45, 11.20 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில் ரத்து செய்யப்படுகிறது.
3 ஆம் தேதி அதிகாலை கும்மிடிப்பூண்டியில் இருந்து 3.50, 4.50 மணிக்கு சென்டிரல் செல்லும் மின்சார ரயில், சென்டிரலில் இருந்து காலை 5.40, 6.25 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
சூலூர்பேட்டையில் இருந்து நாளை இரவு 8.20, 9.40 மணிக்கு சென்டிரல் செல்ல வேண்டிய மின்சார ரயில் சென்னை கடற்கரை ரயில் நிலையம் சென்றடையும். சென்டிரலில் இருந்து நாளை இரவு 11.45, 12.15 மணிக்கு ஆவடிக்கு இயக்கப்பட வேண்டிய மின்சார ரயில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்”.
என்று கூறப்பட்டுள்ளது.