19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மூன்று நாடுகள் பங்குபெறும் மகளிர் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது.
இதில் இலங்கை தமிழரான அமுருதா இங்கிலாந்து மகளிர் அணிக்காக விளையாடி வருகிறார்.
இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவரான அமுருதா சுரேன்குமார் இங்கிலாந்தில் உள்ள வடக்கு லண்டனில் பிறந்து வளர்ந்தவர்.
2006ல் பிறந்த அமுருதா தனது 7 வயதில் வடக்கு லண்டன் கிரிக்கெட் அணியில் சேர்ந்து கிரிக்கெட் விளையாட துவங்கினார், 16 வயது முதல் கவுண்டி அணிகளில் இடம்பிடித்த அம்ருதா 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இங்கிலாந்து மகளிர் அணிக்கு கடந்த ஆண்டு தேர்வானார்.
ஈழத்தை தாயகமாகக் கொண்ட ஈழத்தமிழச்சியான
அமுருதா சுரேன்குமார் இங்கிலாந்து மகளிர் துடுப்பாட்ட அணிக்காக பங்கெடுக்கும்
அறிமுகப்போட்டியில் ஈழத்தமிழர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படும் இலங்கை துடுப்பாட்ட அணிக்கு எதிராக களமிறங்கப்பட்டுள்ளார் 👏🏽வாழ்த்துகள் #Amuruthaa 🐯#TimeToRise ✊🏽 pic.twitter.com/hZ6SGYLwAR
— K U I N S Λ N (@KingKuinsan) March 31, 2024
இங்கிலாந்து அணியுடன் முதல் முறையாக வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இவர் தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் பங்குபெறும் மூன்று நாடுகள் கலந்துகொள்ளும் போட்டி தொடரில் இடம்பெற்றுள்ளார்.
சனிக்கிழமை அன்று நடைபெற்ற போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக விளையாடிய இங்கிலாந்து அணிக்காக பந்துவீசிய அமு-வுக்கு இலங்கை ரசிகர்கள் உற்சாகப்படுத்தினர்.