சென்னை

குற்றவாளிகளின் சரணாலயமே பாஜகவின் கமலாலயம் எனத் தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார்.

வரும் 19 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி  எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே வெளியாக உள்ளன.   தமிழகத்தில், திமுக, பாஜக, அதிமுக கூட்டணிகள் போட்டியிடுகின்றன.  நாம் தமிழர் கட்சி தனியாகப் போட்டியிடுகிறது.  

தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் தளத்தில், 

“கமலாலயம் குற்றவாளிகளின் சரணாலயம்! சிறைச்சாலைகளில் இருக்க வேண்டியவர்கள் கமலாலயத்தில் இருக்கிறார்கள்! கலவரத்தை உருவாக்குபவர்கள் கமலாலயத்தில்…! பாலியல் வன்புணர்வார்கள் கமலாலயத்தில்…! மதவெறியைத் தூண்டுகிறவர்கள் கமலாலயத்தில்…!

குண்டு வெடிப்பு குற்றவாளிகள் கமலாலயத்தில்…! குண்டு தயாரிப்பாளர்களும் கமலாலயத்தில்…! ஊழல்வாதிகள் கமலாலயத்தில்…! போலி செய்திகளைப் பரப்புபவர்கள் கமலாலயத்தில்…! வெறுப்பு பிரசாரம் செய்பவர்கள் கமலாலயத்தில்! மொத்தத்தில் பா.ஜ.க.வின் கமலாலயம் குற்றவாளிகளின் சரணாலயம்”

என்று பதிவிட்டுள்ளார்.