நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் பாஜக பிரச்சாரம் செய்யும் வாகனத்தில் அதிமுக கொடி இருந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

இன்னும் 10 நாட்களில் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.  எனவே தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் தீவிரமாகியுள்ளது. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் பிரசாரத்தைத் தொடங்கி தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அவ்வகையில், நீலகிரி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் எல்.முருகனின் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறார்.  இந்நிலையில் அவருடைய பிரசார வாகனத்தில் கூட்டணிக் கட்சிக் கொடிகளோடு அ.தி.மு.க. கொடியும் இருந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

அதை கவனித்த பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் தனது ஆதரவாளர்களிடம் அது குறித்துத்  தெரிவித்துள்ளார்.   அதையடுக்கு அந்த வாகனத்தில் இருந்த அ.தி.மு.க. கொடி அகற்றப்பட்டது.  ஏற்கனவே  பாஜக – அதிமுக ரகசிய உறவில் உள்ளதாகக் கூறப்படும் நிலையில் இச்சம்பவம்  நடந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.