சென்னை: மக்களவை தேர்தலை முன்னிட்டு வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்து வேட்புமனு பரிசீலனையும் முடிவடைந்துள்ள நிலையில், வேட்புமனு வாபஸ் பெற நாளை வரை நேரம் உள்ளது. இதன்பிறகு நாளை மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி 4 முனை போட்டி நிலவி வருகிறது.
இந்த சூழலில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 20ந்தேதி தொடங்கி 27ந்தேதியுடன் நிறைவு பெற்றது. மார்ச் 29ந்தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 1749 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், முறையாக தாக்கல் செய்யப்படாத 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 1085 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
இன்று வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும். அரசியல் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், மாற்று வேட்பாளர்கள் வேட்புமனுக்களை இன்று வாபஸ் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, நாளை 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.