மும்பை

காராஷ்டிர மாநிலம் அகோலா மேற்கு தொகுதியில் நடைபெற இருந்த இடைத்தேர்தல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுளது.

வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக ரை நடைபெறுகிறது.  இத்துடன், ஒரு சில மாநிலங்களில் இதைத்தேர்தல்களும் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

மகாராஷ்டிர மாநிலம் அகோலா- மேற்கு தொகுதிக்கு வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறும் என கூறப்பட்டது.   தற்போது அகோலா- மேற்கு தொகுதி இடைத்தேர்தலை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல ஆணையம் மும்பை உயர்நீதிமன்றத்தின் (நாக்பூர் அமர்வு) வழிகாட்டுதலின்படி, மகாராஷ்டிராவில் அகோலா மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.