துரை

மிழக அரசு ரூ.1000 கோடிக்கு மேல் உள்ள நிதி நிறுவன மோசடி குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வு குழு அமைக்க மதுரை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.. 

நீயோ மேக்ஸ் என்ற பெயரில் நடக்கும் நிறுவனத்தில் ரு.8000 கோடிக்கு மேல்  மோசடி நடந்ததாகப் புகார் எழுந்தது.  இதையொட்டி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டு  விசாரணை நடந்து வருகிறது.

இன்று நடந்த விசாரணையின்போது மதுரை உயர்நீதிமன்றம்,

“நீதிமன்றத்துக்கு நிதி நிறுவன மோசடி வழக்குகளில் ஏமாறும் மக்களின் நிலை வேதனையை ஏற்படுத்துகிறது, இதில்  குற்றவாளிகளை விடப் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையைத் தான் முக்கியத்துவம் கொடுத்துப் பார்க்க வேண்டும்.

இது போன்ற பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றம் வழக்கறிஞர் ஆணையர்களை நியமனம் செய்தது தவறு இல்லையா?

அப்படி இருக்க முதல் முறையாக நியோ மேக்ஸ் வழக்கில் வழக்கறிஞர் ஆணையர்களை நியமித்திருப்பது விநோதமாக உள்ளது,. நிதி நிறுவன மோசடி வழக்குகளில் குற்றவாளிகள் ஒருபோதும் தப்பித்து விடக்கூடாது.

நீதிமன்றம் நிதி நிறுவன மோசடி வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களிடம் கட்டப் பஞ்சாயத்து செய்ய நீதிமன்றம் அனுமதிக்காது.   எனவே  தமிழக அரசு ரூ.1000 கோடிக்கு மேல் உள்ள நிதி நிறுவன மோசடி குறித்து விசாரிக்க தனியாகச் சிறப்புப் புலனாய்வுக் குழு  அமைக்க  வேண்டும்” 

என அறிவுறுத்தி உள்ளது..