சென்னை: தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் 4-ம் தேதி நடைபெறும் எனவும், மார்ச் 28 முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக இருக்கும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக 4,000 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் மார்ச் மாதத்தின் இரண்டாவது வாரம் பிறந்தும் அறிவிகை வெளியிடப்படவில்லை. இதனால் உதவி பேராசிரியர் பணியிடங்களை எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதுதொடர்பாக பேராசிரியர் பணிக்காக காத்திருக்கும் பல ஆயிரம் பேர் அரசு மீது அதிருப்தியில் இருந்து வந்தனர். இந்த நிலையில், பாமக நிறுவன தலைவர் மருத்தவர் ராமதாஸ் உள அரசியல் தலைவர்கள் இதுகுறித்து திமுக அரசு நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர். தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தரமான உயர்கல்வி வழங்குவதில் தமிழக அரசு காட்டும் அலட்சியமும், தாமதமும் கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று ராமதாஸ் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், நாடாளுமன்ற தேர்தலும் விரைவில் வர உள்ளதால், மக்களின் ஏகோபித்த ஆதரவை பெறும் நோட்கிகல், தற்போது தேர்தல் தேதிகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவி பேராசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் இதற்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வு ஆகஸ்ட் 4-ம் தேதி நடைபெறும் எனவும், அதில் தேர்ச்சி பெறுகிறவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு உதவி பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
கல்வித் தகுதி – குறைந்தபட்சம் 55 மதிப்பெண்களுடன் UGC அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து அந்தந்தப் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும், மேலும் அவர் NET அல்லது SET சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு – ஒருவரின் வயது 23க்குக் குறைவாகவும் 57 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது, மேலும் ஒதுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது தளர்வு இருக்கும்.
குறிப்பு: உதவிப் பேராசிரியர் பணிக்கான அறிவிப்பு TN TRB ஆல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது, விண்ணப்பிக்கும் முன் அறிவிப்புச் சிற்றேட்டைப் பதிவிறக்கம் செய்து தகுதி விவரங்களைச் சரிபார்க்க பரிந்துரைக்கப்படுகிறது.
விண்ணப்பக் கட்டணம் 2024
TN TRB உதவிப் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே விண்ணப்பித்து, 28.08.2019 மற்றும் 04.10.2019 தேதியிட்ட அறிவிப்பு எண்.12/2019க்கு பதில் கட்டணத்தைச் செலுத்தி, மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்றால், ஆன்லைன் விண்ணப்பப் பதிவுச் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. கட்டணம். எனவே, அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கும் போது கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.