சென்னை: முன்னாள் திமுக பிரமுகர் போதைபொருள் கடத்தல் மன்னனான ஜாபர் சாதிக் விவகாரத்தில் யாரேனும் தொடர்ந்து திமுக மீது அவதூறு பரப்பி வந்தால்  அவர்கள்மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும்  என மூத்த வழக்கறிஞரும், திமுக எம்பியுமான  பி.வில்சன் எச்சரித்துள்ளார்.

ரூபாய் 2000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த நிலையில், , தலைமறைவாக இருந்து வந்த திமுகவைச் சேர்ந்த முன்னாள்,  சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில்  கைது செய்யப்பட்டுள்ளார். அவர்  பாகிஸ்தானுக்கு தப்பி ஓடும் வழியில் ஜெய்ப்பூரில் வைத்து மத்திய போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் அவரை கைது செய்தனர். டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு தலைமை அலுவலகத்தில் அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இவருடன் தமிழ்நாட்டில் அரசியல் கட்சியினர், முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினர் மற்றும்  திரைப்படத் துறையினர் என பலரும் சம்பந்தப்பட்டு இருப்பதாக போதைப்பொருள் தடுப்பு அதிகாரி தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில்,.திமுகவின் தலைமைக்கழக சட்ட தலைமை ஆலோசகர் பி.வில்சன் எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஜாபர் சாதிக் மற்றும் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் தேவையில்லாமல் திமுக மற்றும் தி.மு.க தலைவர்களைச் சிலர் கூறி வருகிறார்கள்.

விசாரணை ஆரம்ப நிலையில் இருக்கும்போதே NCB துணை இயக்குநர் செய்தியாளர் சந்திப்பு நடத்தியது, அதுவும் தேர்தல் நேரத்தில் சொல்வது சந்தேகத்தைத் தருகிறது. இதுபோன்ற பேட்டிகள் அவதூறு (Defame) செய்யும் எண்ணத்தில் செயல்படுவதாகவே தெரிகிறது.

இந்த விவகாரத்தில் திமுக கட்சியையோ, திமுக கட்சித் தலைவர்களையோ இணைத்து எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் இது போன்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தினால் அவர்கள் மீது நிச்சயமாக சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் தொடர்வோம்.” என எச்சரித்தார்.

திமுக முன்னாள் நிர்வாகியான தமிழ்நாட்டைச் சேர்ந்த போதைபொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் கைது