சென்னை

ன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தாம்பரம் – முடிச்சூர் – ஸ்ரீபெரும்புதூர் 4 வழிச்சாலையைத் திறந்து வைத்துள்ளார்.

முதல்வர் மு க ஸ்டாலின் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 108 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தாம்பரம் – முடிச்சூர் – ஸ்ரீபெரும்புதூர் நான்கு வழிச்சாலை, மதுராந்தகம் உத்திரமேரூர் வட்டங்களில் 54 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புக்கத்துரை உத்திரமேரூர் நான்கு வழிச்சாலை; திருவண்ணாமலை வட்டத்தில் 140 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கடலூர் சித்தூர் நான்கு வழிச்சாலை; திருத்தணி நாகலாபுரம் சாலையில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 18 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் என மொத்தம் 518 கோடியே 26 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 4 சாலைகள் மற்றும் ஒரு உயர்மட்ட பாலத்தினை இன்று திறந்து வைத்தார்.

மேலும் திருநெல்வேலி மற்றும் ஆலங்குளம் வட்டங்களில் 196 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருநெல்வேலி செங்கோட்டை-கொல்லம் நான்கு வழிச்சாலையையும் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இன்று முதல்வர் மு க ஸ்டாலின் 219 இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தவிர நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்ப்பில் தூய்மைப் பணியாளர்களைத் தொழில்முனைவோர்களாக மாற்றுவதற்கான உன்னத நோக்கத்தின் அடிப்படையில் 213 தூய்மைப் பணியாளர்களுக்கு நவீன கழிவு நீர் அகற்றும் ஊர்திக்கான கடனுதவிக்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்வர் மு.க. ஸ்டாலின் 5 பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார்.