டில்லி: மதுபான கொள்கை வழக்கில் தொடர்ச்சியாக எட்டு சம்மன்களுக்கு பதில் அளிக்காத டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை கோர்ட்டில் புதிதாக வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வரும் 16ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராக கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

 டில்லி ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்துள்ள புதிய மதுபான கொள்கையில் அரசுக்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்த துணை நிலை கவர்னர் உத்தரவிட்டார். அதன்படி, அமலாக்கத்துறை, சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில், ஏற்கனவே டெல்லி முன்னாள் துணைமுதல்வர், அமைச்சர் என சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், வழக்கு குறித்து விசாரணைக்கு ஆஜராக மாநில முதல்வர் கெஜ்ரிவாலுக்சுகு அமலாக்கத்துறை தொடர்ந்து சம்மன் அனுப்பி வருகிறத.

இதுவரை 8 முறை சம்மன் அனுப்பியில், விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. ஏற்கனவே இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில்,  மீண்டும்  நீதிமன்றத்தை நாடியது.  ஆனால், கெஜ்ரிவால், அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகமாட்டேன். காணொலி வாயிலான ஆஜராக சம்மதம் தெரிவித்தார். ஆனால் அமலாக்கத்துறை அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்தது. இந்த மனுவில் நாங்கள் பலமுறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராக வில்லை. இதனால் ஆஜராக உத்தரவிடும்படி மனுவில் குறிப்பிட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணையில், வருகிற 16-ந்தேதியில் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

விசாரணை என்ற பெயரில் அழைத்து கைது செய்ய அமலாக்கத்துறை முயற்சி செய்கிறது. இதன்மூலம் ஆம் ஆத்மி கட்சியை அழிக்க நினைக்கிறது என பா.ஜனதா மீது ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி உள்ளது  குறிப்பிடத்தக்கது.