ஷாஜாபூர்
ராகுல் காந்தி தனது யாத்திரையில் மோடி கோஷம் போட்ட பாஜகவினருக்குப் பறக்கும் முத்தம் கொடுத்துள்ளார்.
மணிப்பூர் முதல் மும்பை வரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ‘இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை’ மேற்கொண்டு வருகிறார். கடந்த சனிக்கிழமை தற்போது அவரது யாத்திரை பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்திற்குள் நடைபெறுகிறது.
இன்று ராகுல் காந்தியின் யாத்திரை மத்தியப் பிரதேசத்தின் ஷாஜாபூர் நகரத்தை அடைந்தபோது, அங்குத் திரண்டிருந்த பாஜக தொண்டர்கள் ‘மோடி, மோடி’ என கோஷம் எழுப்பினர். இதைக் கண்ட ராகுல் காந்தி தனது யாத்திரை வாகனத்தை அவர்கள் அருகில் நிறுத்தினார்.
ராகுல்காந்தி வாகனத்தில் இருந்து கீழே இறங்கி அங்குத் திரண்டிருந்த பாஜகவினரின் அருகில் சென்றார். உடனே ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என கோஷம் எழுப்பிய பாஜகவினரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு மீண்டும் தனது வாகனத்தில் ஏறி யாத்திரையைத் தொடர்ந்த ராகுல்காந்தி வாகனத்தில் இருந்தவாறு பாஜகவினரை நோக்கிப் பறக்கும் முத்தம் கொடுப்பது போல் சைகை காட்டிவிட்டு யாத்திரையைத் தொடர்ந்துள்ளார்.