கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமாருக்கு எதிராக அமலாக்க இயக்குனரகம் (ED) தொடங்கிய பணமோசடி விசாரணை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ED சம்மனை ரத்து செய்ய மறுத்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து டிகே சிவகுமார் தாக்கல் செய்த மனுவை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது.
ஐடி துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் தொடரப்பட்ட இந்த வழக்கில் டி.கே. சிவக்குமார் மற்றும் அவரது உதவியாளர் ஹௌமந்தயா மற்றும் பலர் மீது ED விசாரணை நடத்தி வந்தது.
விசாரணையில், டி.கே. சிவக்குமாருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் சுமார் 200 கோடி ரூபாய் கணக்கில் வராத ரொக்கத்தை ED கைப்பற்றியது.
டி.கே. சிவகுமார் தொடர்புடைய 20 நிறுவனங்களின் 317க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளில் பணம் டெபாசிட் செய்யப்பட்டதாக ED கூறியுள்ளது.
டி.கே. சிவகுமாருடன் தொடர்புடைய ரூ.800 கோடி மதிப்பிலான பினாமி சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ED குற்றம்சாட்டியுள்ளது.
இந்த வழக்கில் டி.கே. சிவக்குமார் செப்டம்பர் 3, 2019 அன்று கைது செய்யப்பட்டார். இருப்பினும், அவருக்கு 2019 அக்டோபரில் டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
மே 2022 இல், இந்த வழக்கில் அவருக்கு எதிராக ED குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
இந்த நிலையில் டி.கே. சிவகுமார் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கை உச்சநீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது.