தேர்தல் பத்திர விவரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான காலக்கெடுவை ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ கோரிக்கை விடுத்துள்ளது.
அநாமதேய தேர்தல் நிதி பத்திரங்களுக்கு கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ரத்து செய்த நிலையில் தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்கள் குறித்த விவரங்களை வழங்குமாறு இந்த பத்திரங்களை வழங்கிய ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கு உத்தரவிட்டிருந்தது.
அரசியல் கட்சிகளால் பணமாக்கப்படும் ஒவ்வொரு தேர்தல் பத்திரத்தின் விவரங்களையும் மார்ச் 6 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்குமாறு எஸ்பிஐ-க்கு அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையில், தேர்தல் பத்திரங்கள் குறித்த தரவுகளை தேர்தல் ஆணையத்திடம் வழங்க ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கூடுதல் அவகாசம் கோரியுள்ளது.