பாட்னா

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மோடியைப் பொய்களுக்கு அதிபதி என விமர்சித்துள்ளார்.

ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் ‘ஜன் விஸ்வாஸ்’ என்னும் பெயரில் யாத்திரை நடத்தி வருகிறார் இந்த யாத்திரையில் நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து  கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

கார்கே தனது உரையில்,

“நாட்டை பிரதமர் மோடி மிகவும் சீரழித்து வருகிறார். அவர் 2 கோடி பேருக்கு வேலை கொடுத்தாரா? மோடி மற்ற நாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தைக் கொண்டு வருவேன் என்று மோடி உறுதியளித்தார். தவிர 2022ம் ஆண்டுக்குள் வீடுகள் கட்டித்தரப்படும் என்றும், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாகவும் உறுதியளித்தார் 

இவற்றை எல்லாம் மோடி நிறைவேற்றினாரா? இல்லை. ஏனெனில் இவை அனைத்தும் பொய்கள் மோடிஜி ஜுடோன் கா சர்தார் (பொய்களின் அதிபதி).யாருமே அவரது திட்டங்களால் பயனடையவில்லை.  ஆனால் தேஜஸ்வி யாதவ தனது பதவிக்காலத்தில் வேலை தருவதாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்.  

எங்களது இந்தியா கூட்டணி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்று வருகிறது. பாஜகவுக்கு எதிரான எங்கள் போராட்டத்தில் நீங்கள் எங்களுக்கு உதவுங்கள்.  இதன் மூலம் ஜனநாயகத்தையும்  அரசியலமைப்பையும் காப்பாற்றுவது உங்கள் கடமை” 

என்று கூறினார்.