சென்னை
சென்னையில் 4 ஆம் வாரமாக இன்று 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
”சென்னை கோடம்பாக்கம்-தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன
எனவேஇன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன .
அதேபோல, தாம்பரத்தில் இருந்து காலை 10.05 மணி முதல் மாலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.”
என்று தெரிவித்துள்ளது
இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக 4-வது வாரமாகச் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
ஏற்கனவே மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் குறைந்த எண்ணிக்கையிலேயே இயக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு பராமரிப்பு பணி காரணமாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதால் ரயில் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.