திருவண்ணாமலை அருகே மணல் கடத்தல் கும்பலுடன் மணல் அள்ளும் இடத்திற்கேச் சென்று நள்ளிரவில், வட்டாட்சியர் பேரம் பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தி.மு.க ஆட்சி என்பது 2021 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அமைந்தது. தேர்தல் பிரசாரத்தின்போதே, திமுகவின் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வெற்றி பெற்ற அடுத்த நிமிடமே மணல் அள்ளலாம் என கூறியது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், திமுக ஆட்சி அமைந்த பிறகு, மணல் கடத்தல், கனிம வளங்கள் கடத்தல் அதிகரித்துள்ளது. இதனால், பல இடங்களில் ஆறு, குளங்கள் பாழடிக்கப்பட்டு, நிலத்தடி நீரும் குறைந்து உள்ளது. இது தொடர்பாக, அமலாக்கத்துறையும் மணல் குவாரிகளில் அதிரடி சோதனை நடத்தி, வழக்கு பதிவு செய்து, 5 மாவட்ட ஆட்சியர்களை விசாரணைக்கு அழைத்துள்ளது.
இந்த நிலையில், திருவண்ணாமலையில், சட்டவிரோதமாக நள்ளிரவில் மணல் அள்ளும் கும்பலுடன், அந்த மாவட்ட வட்டாட்சியர் நள்ளிரவில் ஸ்பாட்டுக்கு சென்று பேரம் பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோவை இடிவி பாரத் வெளியிட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளான தீத்தாண்டபட்டு, நாச்சிப்பட்டு, கொட்டகுளம், கரியமங்கலம் பகுதியில், இரவு நேரங்களில் மணல் கொள்ளை வருவாய்த்துறை அதிகாரிகளின் துணையோடு நடந்து வருகிறது. சம்பவத்தன்று இரவும் மணல் கடத்தல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த செங்கம் வட்டாட்சியர் முருகன், தனது வாகனத்தில் ஆற்றிக்கேச் சென்று ஸ்டாட்டுக்கே சென்ற நிலையில், கரியமங்கலம் செய்யாற்றில் மணல் டிப்பர் லாரியில் கடத்துவதற்காக குவியல் குவியலாக மணல் குவித்து வைக்கப்பட்டிருப்பதை அறிந்ததுடன், அங்கு மணல் கடத்தலில் ஈடுபடுவோர்மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களிடம் பேரம் பேசியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்து செய்தி சேகரிக்க செய்தியாளர்கள், அவர்கள் பேசுவதை வீடியோ எடுத்ததை கண்டு, அதிர்ச்சியடைந்த வட்டாட்சியர் முருகன், போனில், ‘ஜேசிபியை எடுத்துட்டு வந்து உடனே மணலை கலைத்து விடுங்க’ என்று கூறிவிட்டு வண்டிய எடுங்கடா’ என்று மணலை கலைக்காமலே சென்று விட்டார்.
இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மணல் குவாரி: அமலாக்கத்துறை விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டும்! உச்சநீதிமன்றம்