டெல்லி: மாநிலங்களவை எம்.பி.யாக சோனியாகாந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், ஜே.பி.நட்டா மத்திய அமைச்சல் எல்.முருகனும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களில் 56 பேரின் பதவிக்காலம் ஏப்ரல் மாதம் முடிவடைய உள்ளது. அதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த தேர்தலில் போட்டியிடும்வேட்பாளர்களை தேசிய கட்சிகள் மற்றம் மாநில கட்சிகள் அறிவித்தன.
காங்கிரஸ் கட்சி சார்பில், முன்னாள் தலைவர் சோனியாகாந்தி ராஜஸ்தானில் இருந்துபோட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. அதுபோல பாஜக சார்பில், மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், எல்.முருகன், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பெயர்களும் அறிவிக்கப்பட்டன,.
இந்த நிலையில், சோனியா காந்தி, ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 முறை மக்களவை உறுப்பினராக பதவி வகித்த சோனியா காந்தி முதல்முறையாக மாநிலங்களவை எம்பியாக தேர்வாகியுள்ளார். தற்போது உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியின் எம்.பி.யாக உள்ள சோனியா காந்தி, கடந்த 2019-ஆம் ஆண்டு தேர்தலின்போதே மக்களவைக்கு போட்டியிடும் கடைசி தேர்தல் என்று அறிவித்திருந்தார். கர்நாடகத்திலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் ராஜஸ்தானில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். வரும் பிப். 27-ஆம் தேதி 15 மாநிலங்களில் 56 மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தல் நடைபெற உள்ள நிலையில், சோனியா காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக ராஜஸ்தான் சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. மேலும், வரும் மக்களவைத் தேர்தலில் சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுபோல, குஜராத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உடள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து, மத்திய அமைச்சர் எல்.முருகன் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.