சென்னை: பராமரிப்பு பணி காரணமாக, சென்னையில் இன்று 15 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. சென்ட்ரல்-அரக்கோணம் செல்லும் 10 மின்சார ரயில்கள் இன்று இரவு ரத்து. இரவு 9.45 மணி முதல் இரவு 11.55 மணி வரை இயக்கப்படும் 10 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
ஆவடி பணிமனையில் நடைபெற உள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக பிப்ரவரி 17ம் தேதி முதல் பிப்ரவரி 18ம் தேதி வரை ஆவடி வழித்தடத்தில் இயங்கும் 15 புறநகர் ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பிப்ரவரி 17ம் தேதி இரவு 10:25 மணி முதல் பிப்ரவரி 18ம் தேதி காலை 4:30 மணிவரை ஆவடி வழித்தடத்தில் இயங்கும் 15 புறநகர் ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 12 புறநகர் ரயில்கள் பகுதி ரத்து செய்யப்படுவதாகவும், 5 ரயில்கள் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பட்டாபிராம் ரயில் நிலையம், ஆவடி ரயில் நிலையம்,. மூர் மார்க்கெட் ரயில் நிலையம் ஆகிய ரயில் நிலையங்களில் பகுதியாக ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரட்டூர், பட்டரவாக்கம், திருமுல்லைவாயில், அண்ணனூர், இந்து கல்லூரி, பட்டாபிராம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் சில ரயில்கள் நின்று செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆவடி பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சென்ட்ரல்-அரக்கோணம் செல்லும் 10 மின்சார ரயில்கள் இன்று இரவு ரத்து. இரவு 9.45 மணி முதல் இரவு 11.55 மணி வரை இயக்கப்படும் 10 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
பயணிகள் இதற்கு ஏற்ப தங்களது பயணத்தை திட்டமிட்டு கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.