அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் 2023 ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வந்தார்.
இவரது ஜாமீன் மனு தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில் 8 மாதங்கள் ஆகியும் இந்த வழக்கில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் நீடித்து வருகிறது.
செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை மத்திய அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று திமுக விமர்சித்து வந்தது.
இந்த நிலையில் தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி இன்று திடீரென ராஜினாமா செய்துள்ளார்.