➤ இந்த மசோதாபடி, இனி ‘அத்தை / மாமன் முறை மகன் – மகளை’ திருமணம் செய்ய முடியாது.
➤ இந்த மசோதா ஹலாலா, இத்தாத் மற்றும் முத்தலாக் போன்ற நடைமுறைகளை குற்றமாக்குகிறது.
➤ இரு மனைவிகளும் விவாகரத்து கோருவதற்கு ஒரே மாதிரியான காரணங்களையும் நியாயங்களையும் பெற்றிருப்பார்கள். கணவன்மார்களுக்குப் பொருந்தும் விவாகரத்துக்கான அளவுகோல்கள் மனைவிகளுக்கும் நீட்டிக்கப்படும்.
➤ பலதார மணம் தடைசெய்யப்படும், இதனால் முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது இரண்டாவது திருமணங்கள் தடுக்கப்படும்.
➤ இரு பாலினருக்கும் சமமான பரம்பரை உரிமைகள். பெண்களும் ஆண்களுக்கு சமமான பரம்பரை உரிமைகளை அனுபவிப்பார்கள்.
➤ லைவ்-இன் உறவின் முறையான அறிவிப்பு கட்டாயமாக இருக்கும்
➤ குழந்தைத் திருமணத் தடை
➤ மத வேறுபாடின்றி இரு பாலினருக்கும் ஒரே மாதிரியான திருமண வயது நிர்ணயம்
➤ மாநிலத்தின் மக்கள்தொகையில் 2.9% உள்ள பழங்குடி சமூகங்கள், UCC மசோதாவின் அதிகார வரம்பிலிருந்து விலக்கு.
டேராடூன்: நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய பாஜக அரசு கூறியுள்ள நிலையில், இந்தியாவிலேயே முதன்முதலாக உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த சட்டம், முக்கியமாகப் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை நீக்கவும், பெண்களுக்கு எதிரான அநீதி மற்றும் தவறான செயல்களை ஒழிப்பதற்கும் இந்தச் சட்டம் உதவும் என அம்மாநில பாஜக முதல்வர் புஸ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கான பணிகளைச் சட்ட ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநில பா.ஜ.க அரசு, பொது சிவில் சட்ட மசோதாவை உருவாக்க, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், சுதந்திர இந்தியாவில் முதல் மாநிலமாக உத்தரகாண்ட் பிப்ரவரி 4-ம் தேதி தனது சட்டப்பேரவையில் வரலாற்று சிறப்பு மிக்க பொது சிவில் சட்ட மசோதாவைத் தாக்கல் செய்து விவாதங்கள் நடைபெற்றது. அதன் முடிவில், பொது சிவில் சட்டம் உத்தரகாண்ட் மாநிலத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதன்முலம், இந்தியாவிலேயே பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றும் முதல் மாநிலமாக, நாட்டின் சிறிய மாநிலங்களில் ஒன்றான உத்தரகாண்ட் பெற்றுள்ளது.
இந்தியா, பல்வேறு மதங்கள் மற்றும் தொடர்புடைய சட்டங்களைக் கொண்ட ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடாக இருப்பதால், தற்போது வெவ்வேறு மத சமூகங்களுக்கான தனித்துவமான தனிப்பட்ட சட்டங்களைப் பின்பற்றுகிறது. இந்திய அரசியலமைப்பின் 44வது பிரிவு, மாநிலக் கொள்கையின் வழிகாட்டுதல் கோட்பாடுகளின் கீழ் வருகிறது, ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை நிறுவுவதற்கு வாதிடுகிறது.
இந்தியாவில் குற்றவியல் சட்டங்களும், தண்டனைச் சட்டங்களும் அனைவருக்கும் பொதுவானவை. ஆனால் உரிமையியல் சட்டங்கள் எனப்படும் சிவில் சட்டங்கள் மட்டும் சாதி, மத, இன ரீதியாக கலாசாரத்திற்கேற்ப மாறுபடும். இந்தியாவில் உள்ள பல்வேுறு சமூகங்கள், தங்களின் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் திருமணம் , விவகாரத்து, வாரிசு மற்றும் தத்தெடுப்பு விஷயங்களில் வெவ்வேறு சட்டங்களை பின்பற்றி வருகின்றன.
இந்தியாவில் பல்வேறு சிவில் கோட்கள் நடைமுறையில் உள்ளன. இந்தியாவில், திருமணம், விவாகரத்து, பரம்பரை போன்றவற்றை நிர்வகிக்கும் தனிப்பட்ட சட்டங்கள், மத நூல்கள் மற்றும் மரபுகளில் வேரூன்றியுள்ளன.
பிரிட்டிஷ் ஆட்சியின் போது இந்து, முஸ்லிம்களுக்கென தனித்தனியே தனிநபர் சட்டங்கள் இயற்றப்பட்டன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெண்ணுரிமை ஆர்வலர்களால் முதன் முதலில் பொது சிவில் சட்டம் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. பெண்ணுரிமை, பாலின சமத்துவம், மத சார்பின்மை போன்றவற்றை அவர்கள் முன்வைத்தனர். பிரிட்டிஷ் ஆட்சியில் பெண்களுக்கு, குறிப்பாக இந்து விதவைகள் நிலையை மேம்படுத்த சில சட்டங்கள் இயற்றப்பட்டன.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு விரும்பியும் கூட, பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முடியவில்லை. பலவாறான சமரசங்களுக்குப் பிறகு இந்து வாரிசுமைச் சட்டம் 1956-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
1985-ம் ஆண்டு ஷா பானோ வழக்கில், முஸ்லிம் பெண்ணான பானோ தனது முன்னாள் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் பெறலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில்தான், நீதிபதிகள் ‘Uniform’ என்ற வார்த்தையை பயன்படுத்தியிருந்தனர். அதன் பின்னரே பொது சிவில் சட்டம் வேண்டும் என்ற கோரிக்கை அரசியல் அரங்கில் வலுப்பெற்றது. பாரதிய ஜனதாக் கட்சி அதனை வலுவாக முன்னெடுத்தது.
இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான சிவில் கோட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இது பன்முகத்தன்மை கொண்டது என்று கூறப்பட்டாலும், அதன் மீதான விமர்சனங்களும் எழுந்துள்ளது. இந்த சட்டத்துக்கு ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் பல்வேறு வாதங்களை முன்வைக்கின்றனர்: மத மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை: UCC ஐ திணிப்பது இந்தியாவின் கலாச்சார மற்றும் மத பன்முகத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும், குடிமக்களின் மத சுதந்திரத்தை மீறும் என்று அரசியல் விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.
சிறுபான்மை சமூகங்கள் அனுபவிக்கும் தனித்துவமான உரிமைகள் மற்றும் பாதுகாப்புகளை UCC நீர்த்துப்போகச் செய்து, அவர்களின் கலாச்சார சுயாட்சியைப் பாதிக்கும் என்று எதிர்ப்பவர்கள் அஞ்சுகின்றனர். வேறு சிலரோ, இந்தியா அனைவருக்கும் பொதுவானது, அதனால் ஒரே மாதிரியான சட்ட திட்டங்கள்தான் தேவை என வலியுறுத்தி வருகின்றன. ஏற்கனவே இதுபோன்ற ஒரு தகவலை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்ததைநினைவு கூறுகின்றனர்.
இருந்தால், தற்போது இந்த சட்டம் அரசியல் பிரச்சினையாக உருவெடுத்து பேசும் பொருளாக மாறியுள்ளது, கட்சிகள் தேர்தல் ஆதாயங்களுக்காக அதைப் பயன்படுத்துகின்றன, சில சமயங்களில் அதன் தாக்கங்கள் குறித்த உண்மையான விவாதங்களை மறைக்கின்றன.
பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாக UCCக்கு (Uniform Civil Code) ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர், அதே சமயம் தற்போதுள்ள தனிப்பட்ட சட்டங்கள் ஒரே மாதிரியான குறியீடு தேவையில்லாமல் இந்த கவலைகளை தீர்க்க முடியும் என்று எதிர்ப்பாளர்கள் வாதிடுகின்றனர்.
இந்த மசோதா குறித்துப் பேசிய உத்தரகாண்ட் முதல்வர் புஸ்கர் சிங் தாமி, “திருமணம், பராமரிப்பு, வாரிசுரிமை மற்றும் விவாகரத்து போன்ற விஷயங்களில் எந்தவித பாகுபாடுமின்றி அனைவருக்கும் சம உரிமையை பொது சிவில் சட்டம் வழங்கும். உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி முக்கியமாகப் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை நீக்கவும், பெண்களுக்கு எதிரான அநீதி மற்றும் தவறான செயல்களை ஒழிப்பதற்கும் உதவும். ‘மாத்ரிசக்தி’க்கு எதிரான அட்டூழியங்களை நிறுத்த வேண்டிய நேரம் இது. நமது சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு எதிரான பாகுபாடு நிறுத்தப்பட வேண்டும். மக்கள்தொகையில் பாதி இருக்கும் பெண்கள் சம உரிமைகளைப் பெற வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
திருமணம், விவாகரத்து, பரம்பரை போன்ற தனிப்பட்ட விஷயங்களை நிர்வகிக்கும் ஒரே மாதிரியான சட்டங்களை உருவாக்குவதை ஒரு சீரான சிவில் கோட் (UCC) நோக்கமாகக் கொண்டுள்ளது. , மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் அவர்களின் மத சார்புகளைப் பொருட்படுத்தாமல் தத்தெடுப்பு.
இந்தியா, பல்வேறு மதங்கள் மற்றும் தொடர்புடைய சட்டங்களைக் கொண்ட ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடாக இருப்பதால், தற்போது வெவ்வேறு மத சமூகங்களுக்கான தனித்துவமான தனிப்பட்ட சட்டங்களைப் பின்பற்றுகிறது.
இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்கள் போன்ற முக்கிய மத சமூகங்கள் அந்தந்த தனிப்பட்ட சட்டங்களைக் கடைப்பிடிக்கின்றன.
இந்து தனிநபர் சட்டம் பண்டைய நூல்கள் மற்றும் பழக்கவழக்கங்களின் அடிப்படையில், இந்து திருமணச் சட்டம், 1955 மற்றும் இந்து வாரிசுச் சட்டம், 1956 போன்ற சட்டங்களால் இந்து தனிநபர் சட்டங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன, இது வாரிசுரிமை விஷயங்களில் பெண்களுக்கு சம உரிமைகளை உறுதி செய்கிறது.
முஸ்லீம் தனிநபர் சட்டம் ஷரியாவால் நிர்வகிக்கப்படுகிறது, முஸ்லீம் தனிநபர் சட்டம் (ஷரியத்) விண்ணப்பச் சட்டம், 1937, முஸ்லிம்களிடையே திருமணம், விவாகரத்து, பரம்பரை மற்றும் பராமரிப்பு விவகாரங்களை ஒழுங்குபடுத்துகிறது.
பிற மத சமூகங்களான கிறிஸ்தவர்கள், பார்சிகள் மற்றும் யூதர்கள் 1925 இன் இந்திய வாரிசுச் சட்டத்தைப் பின்பற்றுகிறார்கள், இது பரம்பரைக்கான குறிப்பிட்ட விதிகளை உள்ளடக்கியது.
ஆனால், இந்திய அரசியலமைப்பின் 44வது பிரிவு, மாநிலக் கொள்கையின் வழிகாட்டுதல் கோட்பாடுகளின் கீழ் வருகிறது, ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை நிறுவுவதற்கு வாதிடுகிறது. எவ்வாறாயினும், இந்த விஷயத்தின் உணர்திறன் மற்றும் சிக்கலான தன்மையை ஒப்புக்கொண்டு, அத்தகைய குறியீட்டை இயற்றுவதை அரசாங்கத்தின் விருப்பத்திற்கு அரசியலமைப்பு விட்டுவிடுகிறது. இது சர்ச்சைக்குரிய மற்றும் அரசியல் ரீதியாக நுட்பமான பிரச்சினையாகவே உள்ளது.
இந்தியாவில், திருமணம், விவாகரத்து, பரம்பரை போன்றவற்றை நிர்வகிக்கும் தனிப்பட்ட சட்டங்கள், மத நூல்கள் மற்றும் மரபுகளில் வேரூன்றியுள்ளன. இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்கள் போன்ற முக்கிய மத சமூகங்கள் அந்தந்த தனிப்பட்ட சட்டங்களைக் கடைப்பிடிக்கின்றன. இந்து தனிநபர் சட்டம்:பண்டைய நூல்கள் மற்றும் பழக்கவழக்கங்களின் அடிப்படையில், இந்து திருமணச் சட்டம், 1955 மற்றும் இந்து வாரிசுச் சட்டம், 1956 போன்ற சட்டங்களால் இந்து தனிநபர் சட்டங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன, இது வாரிசுரிமை விஷயங்களில் பெண்களுக்கு சம உரிமைகளை உறுதி செய்கிறது. ஆனால், இந்த பொது சிவில் சட்டத்தில் அனைத்து மதங்களிலும் மாற்றம் செய்யப்பட்டு ஒரே மாதிரியாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில்தான் உத்தரகாண்ட் மாநில பாஜக அரசு, நாட்டிலேய முதன்முறையாக பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தி வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.
பொது சிவில் சட்ட மசோதாவின் சிறப்புகள்:
இந்தியாவில் ஒரே மாதிரியான குடிமைச் சட்டத்தைப் (UCC) புரிந்துகொள்வதற்கான குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்பான கட்டுப்பாடுகள் உட்பட, மக்கள்தொகைக் கட்டுப்பாட்டிற்கான நடவடிக்கைகள்: திருமணம், விவாகரத்து, பரம்பரை போன்ற தனிப்பட்ட விஷயங்களை நிர்வகிக்கும் ஒரே மாதிரியான சட்டங்களை உருவாக்குவதை ஒரு சீரான சிவில் கோட் (UCC) நோக்கமாகக் கொண்டுள்ளது. , மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் அவர்களின் மத சார்புகளைப் பொருட்படுத்தாமல் ஒரே சட்டத்தின்படி வாழும் வகையில் இந்தசட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த இந்தப் பொது சிவில் சட்ட மசோதாவின் பிரிவு 4 (1)-ல் பலதார மணம் அனுமதிக்கப்படவில்லை. யாரைத் திருமணம் செய்யலாம் என்ற வரைமுறையையும், திருமணத்தின்போதும், மறு மணத்தின்போதும், வாழ்க்கைத் துணை இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் சட்டம் வரையறுக்கப்பட்டிருக்கிறது.
தடைசெய்யப்பட்ட உறவுகளின் அளவுக்குள் வரும் திருமணமான தம்பதிகளுக்கு இந்து திருமணச் சட்டத்தில் இருந்து “வழக்கமான” விதிவிலக்கை இந்த மசோதா தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இரண்டு நபர்கள் பொதுவான வம்சாவளியைப் பகிர்ந்து கொண்டால் அல்லது அவர்கள் ஒரு பொதுவான மூதாதையரின் மனைவி/கணவராக இருந்தால் “தடைசெய்யப்பட்ட உறவின் அளவுகளுக்கு” உட்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.
அதாவது, இனி ‘அத்தை / மாமன் முறை மகன் – மகளை’ திருமணம் செய்ய முடியாது!
மேலும், பிரிவு 4 (3)-ல் பெண்களின் திருமண வயது 18 எனவும், ஆண்களுக்கு 21 எனவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
முஸ்லீம் தனிநபர் சட்டம் ஷரியாவால் நிர்வகிக்கப்படுகிறது, முஸ்லீம் தனிநபர் சட்டம் (ஷரியத்) விண்ணப்பச் சட்டம், 1937, முஸ்லிம்களிடையே திருமணம், விவாகரத்து, பரம்பரை மற்றும் பராமரிப்பு விவகாரங்களை ஒழுங்குபடுத்துகிறது.
மேலும், கிறிஸ்தவர்கள், பார்சிகள் மற்றும் யூதர்கள் 1925 இன் இந்திய வாரிசுச் சட்டத்தைப் பின்பற்றுகிறார்கள், இது பரம்பரைக்கான குறிப்பிட்ட விதிகளை உள்ளடக்கி உள்ளது.
ஹலாலா, இத்தாத் மற்றும் முத்தலாக் போன்ற நடைமுறைகளை குற்றம் என கூறுகிறரது. இனிமேல் இதுபோன்ற நடைமுறைகளுக்கு அனுமதி இல்லை என தெரிவித்து உள்ளது.
பலதார மணம் தடைசெய்யப்படும், இதனால் முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது இரண்டாவது திருமணங்கள் தடுக்கப்படும்.
இரு மனைவிகளும் விவாகரத்து கோருவதற்கு ஒரே மாதிரியான காரணங்களையும் நியாயங்களையும் பெற்றிருப்பார்கள். கணவன்மார்களுக்குப் பொருந்தும் விவாகரத்துக்கான அளவுகோல்கள் மனைவிகளுக்கும் நீட்டிக்கப்படும்.
இரு பாலினருக்கும் சமமான பரம்பரை உரிமைகள். பெண்களும் ஆண்களுக்கு சமமான பரம்பரை உரிமைகளை அனுபவிப்பார்கள்.
லைவ்-இன் உறவின் முறையான அறிவிப்பு கட்டாயமாக இருக்கும். அதாவத, லிவ்-இன் உறவின் விவரங்களை ஏற்றுக்கொள்வதற்கு ஓர் இணையதளம் தயாராகி வருகிறது. விவரங்கள் மாவட்டப் பதிவாளரால் சரிபார்க்கப்படும். அவர் விசாரணை நடத்துவார். அதன்பிறகே அனுமதி குறித்து முடிவு செய்யப்படும். மேலும், இந்த உறவில் நுழைபவருக்கு நிச்சயம் 21 வயது கடந்திருக்க வேண்டும்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் வசிப்பவர்கள், மாநிலத்திற்கு வெளியே லிவ்-இன் உறவில் இருப்பவர்களுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும். ஒழுக்கத்துக்கு எதிராகவோ, அல்லது இருவரில் ஒருவர் முறையாக அரசுக்குத் தெரிவிக்காமல் திருமணம் செய்துகொண்டாலோ, அல்லது மற்றொரு உறவிலிருந்தாலோ, அல்லது இருவரில் ஒருவர் 18 வயதுக்குட்பட்டவராக இருந்தாலோ, அரசுக்குத் தவறான தகவல்களைக் கொடுத்தாலோ அவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. லிவ்-இன் உறவு குறித்து பதிவுசெய்யத் தவறினால், அதிகபட்சமாக ஆறு மாதங்கள் சிறைத் தண்டனையும், ரூ.25,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். பதிவுசெய்வதில் தாமதம் ஏற்பட்டால், ஒரு மாதம் முதல் மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
குழந்தைத் திருமணத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மத வேறுபாடின்றி இரு பாலினருக்கும் ஒரே மாதிரியான திருமண வயதை நிர்ணயம் செய்ய மசோதா விரும்புகிறது.
மாநிலத்தின் மக்கள்தொகையில் 2.9% உள்ள பழங்குடி சமூகங்கள், UCC மசோதாவின் அதிகார வரம்பிலிருந்து விலக்கப்படலாம்.
உள்பட ஏராளமான திருத்தங்கள் இந்த சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
முழு விவரங்களை காண கீழே காணப்படும் பிடிஎஃப் (PDF) பைலைடவுன்லோடு செய்யவும்…
civil-code-bill-english – Uttakhand 08-02-24