மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு இடங்களில் அமெரிக்கா மறைமுக போரில் ஈடுபட்டுள்ளதை அடுத்து அமெரிக்க மற்றும் உலக பொருளாதாரம் தேக்கமடைந்துள்ளது.
இதனால் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதுடன் வேலையிழப்புகள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் உலகின் முன்னணி டிஜிட்டல் பேமென்ட் நிறுவனமான PayPal நிறுவனம் 2024ம் ஆண்டில் தனது ஊழியர்களில் 9 சதவீதம் பேரை வீட்டுக்கு அனுப்ப முடிவெடுத்துள்ளது.
உலகம் முழுக்க சுமார் 2500 ஊழியர்களை வெளியேற்ற இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தவிர, உலகின் முன்னணி கொரியர் நிறுவனமான UPS நிறுவனம் தனது ஊழியர்களில் 12000 பேரை வெளியேற்ற திட்டமிட்டுள்ளது.
இந்தியாவிலும் விப்ரோ உள்ளிட்ட முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் இருந்து நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வெளியேற்றப்பட உள்ள நிலையில் புதிதாக ஆள்சேர்க்கும் பணியை நிறுத்திவைத்துள்ளது.