சென்னை

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் 100  டி எஸ் பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது  தேர்தல் நேரத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கமாகும்.  அவ்வகையில் தற்போது 100 டி எஸ் பிக்களை இடமாற்றம் செய்து தமிழக டி ஜி பி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். 

ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணிபுரியும் காவல்துறையி னரை உடனடியாக மாற்ற வேண்டும் என டி.ஜி.பி. ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பி இருந்த நிலையில், இந்த இடமாற்றம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகத் தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக ஐ.ஜி.க்கள் முதல் காவலர்கள் வரை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டதற்கிணங்க காவல் துறையினர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.