குழந்தை மையங்களில் பயனடைந்து வரும் 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கான தினசரி மதிய உணவு திட்டத்தின் செலவின தொகையை உயர்த்தி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பருப்பு பயன்படுத்தும் நாட்களில் நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு ரூ. 1.52 ஆகவும் பருப்பு பயன்படுத்தாத நாட்களில் ரூ. 1.81 ஆகவும் வழங்கப்பட்டு வந்தது.
இனி நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு ரூ. 2.39 ஆக வழங்க உத்தரவிட்டுள்ளார்.
காய்கறிக்கு 1 ரூபாய் 33 பைசாவும் உப்பு மற்றும் தாளித பொருட்களுக்கு 46 பைசாவும் எரிபொருளுக்கு 60 பைசாவும் செலவீனமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் 2 முதல் 6 வயதுக்கு உட்பட்ட சுமார் 11.5 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பலனடையும் நிலையில் இதனால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ. 41.14 கோடி கூடுதலாக செலவாகும் என்று கூறப்படுகிறது.