சென்னை
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 18 ஆ,ம் முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர்புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் அவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு முன்னிறுத்தப்பட்டார் .
Patrikai.com official YouTube Channel