திருச்சி: குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து சக மாணவனை குடிக்கச்செய்த 2 சட்டக்கல்லூரி மாணவர்களை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளது.
பிஎல் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் 2 பேர், சக மாணவர் ஒருவருக்கு சிறுநீர் கலந்து குளிர் பானத்தில் ஏமாற்றிக் கொடுத்து குடிக்க வைத்துள்ளனர். அதன் பின் இதையறிந்து பாதிக்கப்பட்ட மாணவர் அளித்த புகாரில் பெயரில், விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து, அந்த மாணவர்களை இடைநீக்கம் செய்துள்ள பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வி. நாகராஜ் அவர்கள் செமஸ்டர் எழுதவும் தடை விதித்துள்ளார்.
திருச்சி – திண்டுகல் சாலையில் நாவலூர் குட்டப்பட்டு பகுதியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழககம் செயல்பட்டு வருகிறது. இங்கு எராளமான மாணவர்கள் சட்டம் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் , ஜனவரி 6ம் தேதி மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இங்கு, இளங்கலை சட்டப் படிப்பு இறுதியாண்டு படிக்கும் பட்டியலின மாணவரும் அவருடன் பயிலும் 2 மாணவர்களும் தோழர்களாக இருந்து வந்துள்ளனர்.
கடந்த ஜனவரி 6ஆம் தேதி மாலை முதல், பாதிக்கப்பட்ட பட்டியல் இன மாணவரும் அவருடன் இளநிலை இறுதியாண்டு சட்டப்படிப்பு படிக்கும் வேறு சில மாணவர்களும் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் சந்தித்துள்ளனர். அப்போது பி.ஏ.எல்.எல்.பி இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் 2 பேர், சக மாணவர் ஒருவருக்கு சிறுநீர் கலந்து குளிர் பானத்தில் ஏமாற்றிக் கொடுத்து குடிக்க வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் மாணவர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன் மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டது. ஆனால், சில மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் தலையீட்டின் பேரில் மோதல் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர் பல்கலைக்கழக பதிவாளரிடம் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரில் பெயரில், விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டது. அக்குழுவினர், துணை வேந்தர் அமைத்துள்ள 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவில் பல்கலையின் உதவிப் பேராசிரயர்கள் உள்ளனர். அவர்கள், ஜனவரி 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை, பாதிக்கப்பட்ட மாணவர், குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள், இருப்பிட விடுதி காப்பாளர் மற்றும் உடன் படிக்கும் மாணவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த குழு விசாரணை நடத்திக்கொண்டிருக்கும்போதே பாதிக்கப்பட்ட பட்டியலின மாணவர் புகாரை திரும்பப்பெற முயன்றுள்ளார். மிரட்டல் காரணமாக அவர் புகாரை வாபஸ் வாங்க முயன்றதாக கூறப்பட்டது. அதே வேளையில், ராகிங் தொடர்பான சட்ட விதிகளின்படி மாணவர் புகாரை திரும்பப் பெற முடியாது என்பதால், புகாரை வாபஸ் பெற முடியாது என பல்கலைக்கழக பதிவாளர் பாலகிருஷ்ணன் தகவல் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்த விசாரணை குழுவினர் நடத்திய விசாரணை அறிக்கையை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வி. நாகராஜ் , பதிவாளர் பால கிருஷ்ணன் ஆகியோரிடம் அளித்தனர்.
இந்த அறிக்கையின் அடிப்படையில், சமந்தபட்ட 2 மாணவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நடப்பு கல்வியாண்டில் 10வது செமஸ்டர் தேர்வு எழுதவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.