ஜெய்ப்பூர்
ராமர் கோவில் குடமுழுக்கை முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலத்தில் 22 ஆம் தேதி இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு இடப்பட்டுள்ளது.
வரும் 22 ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. உத்தரப் பிரதேச மாநில அரசு இந்த விழாவிற்கான ஏற்பாடுகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. விழாவில் கலந்து கொள்ளக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விழாவையொட்டி வரும் 22 ஆம் தேதி அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் அரை நாள் விடுமுறை அளித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. மேலும் வரும் 22 ஆம் தேதி பாஜக ஆலும் மாநிலங்களில் அலுவலகங்களுக்கும் அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டது.
தற்போது அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 22 ஆம் தேதி அனைத்து மீன் கடைகள், இறைச்சிக் கடைகள் மற்றும் வதைக் கூடங்களை மூடுவதற்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.