அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ந்தேதி கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில், அதன்கான 7 சடங்குகள் இன்று காலை தொடங்கி நடை பெற்று வருகிறது. ராம் லல்லா சிலைக்கான கும்பாபிஷேக சடங்குகள் செவ்வாய்கிழமை தொடங்கி கோவில் திறப்பு விழா வரை ஒரு வாரம் நடைபெறும்.
இந்தியாவின் அடையாளத்தை மேலும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் , உ.பி. மாநிலம் அயோத்தில் உள்ள ராமஜென்ம பூமியில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கான 7 நாள் சடங்குகள் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 22 ஆம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேக விழாவுடன் இந்த சடங்குகள் முடிவடையும். அன்றைய தினம் கோயில் கருவறையில் ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
ராமர்கோவில் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆயிரக்கணக்கான விவிஐபி விருந்தினர்கள் கலந்துகொள்ள உள்ளனர். பிரதமர் மோடி, ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு முன்னதாக, 11 நாள் அனுஷ்டானத்தை (சிறப்பு சடங்கு) மேற்கொள்வதாக மோடி கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, இந்த சூழலில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று முதல் 7 நாள் சடங்குகள் நடைபெற தொடங்கி உள்ளது. இந்த ஏழு நாட்களில், இந்து மரபுகளின்படி சடங்கு சம்பிரதாயங்கள் அடங்கிய பூர்வாங்க பூஜைகள் நடைபெறும்.
அதன்படி இன்று (ஜனவரி 16) ஆம் தேதி, ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவால் நியமிக்கப்பட்ட ஆச்சார்யா பரிகார விழாவை தொடங்கி உள்ளார்.
தொடர்ந்து நாளை (ஜனவரி 17 ஆம் தேதி) ராம் லல்லா சிலையின் பரிசார் பிரவேசம் விழா நடைபெற உள்ளது.
ஜனவரி 18ஆம் தேதி தீர்த்த பூஜை, ஜல யாத்திரை, கந்தாதிவாஸ் ஆகிய சடங்குகள் நடைபெறும்.
ஜனவரி 19-ம் தேதி காலை ஔஷததிவாஸ், கேசராதிவாஸ், கிருதாதிவாஸ் ஆகிய சடங்குகள் நடைபெறும். பின்னர் மாலையில் தான்யாதிவாஸ் சடங்கு நடைபெறும்.
ஜனவரி 20ம் தேதி காலை ஷர்கராதிவாஸம், பலாத்வாஸ் சடங்குகள் நடக்கும். மாலையில் புஷ்பதீபம் நடக்கும்.
ஜனவரி 21-ம் தேதி காலை மத்யாதிவாஸ் சடங்கும், மாலையில் ஷியாதிவாஸமும் நடைபெறும். நெருங்கும் ராமர் கோவில் திறப்பு விழா.
ஜனவரி 22-ம் தேதி பிரம்மாண்ட கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற உள்ளது.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் ராமர் கோயிலின் பிரம்மாண்ட கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவில் கலந்துகொள்ள கோவில் அறக்கட்டளை 7,000 பேருக்கு அழைப்பு விடுத்துள்ளது, கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் பெரும்பணக்கார தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி ஆகியோர் அடங்குவர்.
நாடு முழுவதும் அயோத்திக்கு வரும் பரிசுகள் பல்வேறு மாநிலங்களில் இருந்து மக்கள் தண்ணீர், மண், தங்கம், வெள்ளி, ரத்தினங்கள், ஆடைகள், நகைகள், பெரிய மணிகள், டிரம்ஸ், வாசனை/வாசனைப் பொருட்கள் போன்ற தனித்துவமான பரிசுகளுடன் தொடர்ந்து அயோத்திக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் 23ந்தேதி முதல் ராமர்கோவில் வருகை தந்தை ராமபிரனின் ஆசி பெற்று செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.