டெல்லி: தங்களுக்கு வரும் தெரியாத மொபைல் எண்ணைத் தொடர்ந்து ‘*401#’ டயல் செய்ய வேண்டாம் என பொதுமக்களுக்கு மத்திய தகவல் தொடர்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய தொலைத்தொடர்புத் துறை சந்தாதாரர்களுக்கு ஒரு எச்சரிக்கை தகவலை அனுப்பி உள்ளது. அதில், அறியப்படாத செல்போன் எண்ணைத் தொடர்ந்து *401# டயல் செய்யும்படி கோரும் மோசடி அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரிக்கை செய்துள்ளது.. ஒரு நபர் ‘*401#’ மற்றும் பின்னர் தெரியாத எண்ணை தட்டச்சு செய்யும் போது, அவர்களின் மொபைல் சாதனத்தின் நிபந்தனையற்ற அழைப்பு பகிர்தல் அம்சம் அந்த அறியப்படாத எண்ணுக்கு செயல்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
அதாவது, ஒருவரது செல்போனுக்கு வரும் அழைப்புகளை அடையாளம் தெரியாத மற்றொரு நபருக்குத் திரும்பிவிடும் வகையில் வரும் மோசடி அழைப்புகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய தகவல்தொடா்புத் துறை அறிவுறுத்தி உள்ளது.
ஒவ்வொரு மொபைல் போனுக்கும், அடையாளம் தெரிய நபர்களிடம் இருந்து அழைப்புகள் வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பல மோசடிகள் அரங்கேறுகின்றன. தொலைத்தொடா்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் வாடிக்கையாளா் சேவை மைய பிரதி அல்லது தொழில்நுட்ப பணியாளா் என்ற பெயரில் தொடா்புகொள்ளும் மா்ம நபா்கள், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் சிம் காா்ட் அல்லது தொலைத்தொடா்பில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக கூறி, பயனர்களின் கடவுசொல், வங்கி செயல்பாடுகளை தெரிந்துகொண்டு மோசடியில் ஈடுபடுகின்றனர்.இதை தடுக்கும் வகையில், தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மத்திய தொலை தொடர்புதுறை பொதுமக்களை எச்சரித்துள்ளத. அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்துவரும் கால்கள், அவர்கள் கூறவது போல, ‘ *401#’-ஐ தொடா்ந்து அவா்கள் கூறும் செல்பேன் எண்ணை டயல் செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தி உள்ளனர். இதுபோன்ற தவறுகளை செய்வதன் மூலம் வாடிக்கையாளருக்கு வரும் அழைப்புகள், அடையாளம் தெரியாத கைப்பேசி எண்ணுக்குத் திருப்பி அனுப்பப்படுகிறது. இதைப் பயன்படுத்தி, மா்ம நபா்கள் மோசடி சம்பவங்களில் ஈடுபடுகின்றனா்.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையில், ‘எந்த தொலைத்தொடா்பு சேவை வழங்கும் நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளா்களைத் தொடா்பு கொண்டு ‘*401#’ எண்ணை டயல் செய்யுமாறு கூறுவது இல்லை. அவ்வாறு டயல் செய்து, வரக் கூடிய அழைப்புகள் வேறொரு கைப்பேசி எண்ணுக்குத் திருப்பி அனுப்பப்பட்டால், கைப்பேசி அமைப்பில் அழைப்புகளைத் திருப்பி அனுப்பும் வசதியை உடனடியாக செயலிழக்கச் செய்யவேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.