சென்னை: அரசு பேருந்துதொழிலாளர்கள் ஸ்டிரைக் எதிரொலியாக தற்காலிக ஓட்டுநர்கள் – நடத்துநர்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.
6அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழற்சங்கத்தினர் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். சி.ஐ.டி.யு, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஏ.ஐ.டி.யு.சி, டி.டி.எஸ்.எப், பி.எம்.எஸ் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. ஆனால்,, திமுக, காங்கிரஸ் உள்பட சில தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவில்லை என அறிவித்து உள்ளது. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
நேற்று (8ந்தேதி) தமிழ்நாடு முழுவதும் 14, 214 பேருந்துகள் அதாவது 94 சதவிகித பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துத்துறை விளக்கம் அளித்துள்ளது. மொத்தம் இயக்கப்படும் 15 ஆயிரத்து 138 பேருந்துகளில் 14 ஆயிரத்து 214 பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு தெரிவித்தது. இன்று (9ந்தேதி) மாநிலம் முழுவதும் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளைவிட கூடுதலாக 60 பேருந்துகளுடன் மொத்தம் 9,764 பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. அதாவது, தமிழகம் முழுவதும் இன்று 97.7 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. சென்னை மண்டலத்தில் 111.75%, விழுப்புரம் மண்டலத்தில் 97.77%, சேலம் மண்டலத்தில் 97.24%, கோவை மண்டலத்தில் 994.04%, கும்பகோணம் மண்டலத்தில் 98%, மதுரை மண்டலத்தில் 98.71%, நெல்லை மண்டலத்தில் 100% பேருந்துகள் இயக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், அரசு பேருந்துகளை இயக்க தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது. பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் அசல் உரிமம், ஆதார் அட்டையுடன் மாவட்ட போக்குவரத்து கழக அதிகாரிகளை அணுக அரசு அறிவுறுத்தி உள்ளது.
சட்டப்படியான நடவடிக்கைகளை சந்திக்க தயார்! போக்குவரத்து தொழிலாளர் சங்க தலைவர் சவுந்தரராஜன்