ஐதராபாத்: சென்னையில் இருந்து கிளம்பிய சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பயணிகள் சிலர் காயமடைந்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற சார்மினார் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தானது தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே நம்பள்ளி ரயில்நிலையம் அருகே தடம் புரண்டது. ரயிலின் ஒரே 3 ரயில் பெட்டிகங்ள மட்டும் ரயில் தடம் புரண்ட நிலையில், இந்த விபத்தில் 5க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்துள்ளனர்.
இச்சம்பவம் காலை 9.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த ரயில் நிலையம் ரயில்கள் முடிவடையும் ஒரு முனைய நிலையமாகும். ரயில் முடிவதற்கு முன்பே நிறுத்தப்பட்டிருக்க வேண்டும், இருப்பினும் ரயில் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறத. இந்த சம்பவத்தில் ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த சம்பவத்தில் ரயிலின் கதவுகளுக்கு அருகில் நின்றிருந்த 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெற்கு மத்திய ரயில்வே ராகேஷ், சிபிஆர்ஓ தெரிவித்துள்ளார்.