சென்னை: திமுக முன்னாள் எம்.எல்.ஏ. கு.க. செல்வம் காலமானார். அவருக்கு வயது 71.

சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட கு.க.செல்வம் திமுகவில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணைந்து மீண்டும திமுகவில் இணைந்தார். இதையடுத்து கடந்த சில வருடங்களாக அரசியல் நிகழ்வுகளில் பங்குபெறாமல் இருந்து வந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக  போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

2016ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின்போது,  சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு,  எம்.எல்.ஏ. வாக தேர்வு செய்யப்பட்டவர்  கு.க.செல்வம். கு.க. செல்வம் தி.மு.க. தலைமை நிலைய அலுவலக செயலாளராக இருந்தார்

. இவருக்கும்  கட்சி தலைமைக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால்,  திமுகவில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணைந்தார். பின்னர், அங்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில்,  மீண்டும் தி.மு.க.வில் இணைந்தார். இதையடுத்து கட்சி பணிகளில் அதிகம் ஆர்வம் காட்டாமல் இருந்த வந்தார். மேலும் வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.