சென்னை
இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை புத்தகக் காட்சியைத் தொடங்கி வைக்கிறார்.

இன்று முதல் 21 ஆம் தேதி வரை தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 47 ஆவது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற உள்ளது. இண்ட் புத்தகக் காட்சியை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த 47 ஆவது சென்னை புத்தகக் காட்சி வேலை நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும் எனவும் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகக் காட்சியில் சுமாா் 1,000 அரங்குகள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel