சென்னை: மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களுக்கு அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கனமழை கொட்டியது. டிசம்பரில் பெய்த பேய்மழையால், சென்னை முதல், வட தமிழகம் முதல் தென் தமிழகம் வரை அனைத்து இடங்களில் மழை கொட்டியதால், மாநிலமே வெள்ளத்தில் மிதந்து. இதனால், ஏராளமானோர் வீடுகள், உடமைகள், ஆடுமாடுகளை இழந்து பொதுவெளியில் தஞசமடைந்தனர். இந்த மழையினால் சென்னை முதல் கன்னியாகுமரி வரை பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட தேதிகளில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகளை பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்பட முடியவில்லை.
இதைதொடர்ந்து, அரையாண்டு தேர்வு விடுமுறை வந்ததால் மற்ற மாவட்ட பள்ளிகளை போலவே தென்மாவட்ட பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை விடுமுறையை அறிவித்தது. தமிழ்நாடு முழுவதும் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கடந்த டிச.23ம் தேதி முதல் அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. அன்று விடப்பட்ட விடுமுறையானது, ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு மீண்டும் வருகின்ற 2ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளால் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகளுக்கான தேதியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். அதன்படி, 6 முதல் 10 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வருகின்ற ஜனவரி 4ம் தேதி முதல் 10ம் தேதி வரையிலும், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஜனவரி 4ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது