சென்னை: நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று காலை 3:45 மணிக்கு காலமானதாக சுகாதாரத்துறை  தெரிவித்து உள்ளது. அவரது மறைவு குறித்து மியாட் மருத்துவமனை அறிக்கை  வெளியிட்டு உள்ளது.

இதுதொடர்பாக  மியாட் மருத்துவனை சார்பில் வெளியிட்ட அறிக்கையில், “கேப்டன் விஜயகாந்த் நுரையீரல் அழற்சி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் ஆதரவுடன் சிகிச்சை பெற்றிருந்தார். மருத்துவ பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் இன்று காலை 28 டிசம்பர் 2023 காலமானார்.” என குறிப்பிடப்பட்டு இருந்தது.

மறைந்த விஜயகாந்த் உடல் மருத்துவமனையில் இருந்து அவரது சாலிகிராமம் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து மதியம் கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு எடுத்துச்செல்லப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவர் ‘கேப்டன் விஜயகாந்த்’ – வாழ்க்கை வரலாறு