புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், கிறிஸ்மஸ் பரிசுக்காக தனது உடன்பிறந்த சகோதரியை 14வயதான டீனேஜ் சிறுவன் சுட்டுக் கொன்ற விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
புளோரிடாவில் கிறிஸ்மஸ் ஈவ் அன்று டீன் ஏப்ரியல் பால்ட்வின், அவரது 23 வயது சகோதரி மற்றும் அவரது தாயார், 15 வயது சகோதரர் மற்றும் சகோதரியின் குழந்தைகளுடன் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தார், அப்போது, டீன் ஏஜ் சகோதரர்கள் இடையே யாருக்கு கிறிஸ்துமஸ் பரிசுகள் அதிகம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து மோதல் ஏற்பட்டது. “யார் எதை வாங்குகிறார்கள் , யாருக்கு என்ன பணம் செலவழிக்கப்படுகிறது என்பதைப் பற்றி பர்சேஸ் செய்த கடையில் அவர்களுக்கு இடையே விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த மோதல் வீட்டிற்கு சென்ற பிறகும் தொடர்ந்தது.
இந்த குடும்பத்தினர் அந்த பகுதியில் இருந்து சுமார் அரை மணி நேர பயண தூரத்தில் உள்ள லார்கோவில் உள்ள தங்கள் பாட்டி வீட்டிற்கு சென்றனர். அங்கும் அவர்களுக்கு இடையே தொடர்ந்து வாக்குவாதம் நடைபெற்று வந்தது. ஆனால், இதை அவர்களின் பாட்டி பால்ட்வின் அதை கண்டுகொள்ளாமல் வீட்டு வேலையில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தார்.
சிறுவர்கள் தொடர்ந்து வாக்குவாதம் செய்த நிலையில், 14 வயது சிறுவன் ஒரு அரை தானியங்கி கைத்துப்பாக்கியை வெளியே இழுத்து, அதை தன் சகோதரனை நோக்கி சுட்டிக்காட்டி, அவனை தலையில் சுடப் போவதாகக் கூறினான், அதைக்கண்ட அவரது மூத்த சகோதரி, தான் சண்டையிட விரும்பவில்லை என்றும், தனது சகோதரனை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறினார். அவர்களது மாமா ஒருவர் பதின்ம வயதினரைப் பிரித்து, 14 வயது சிறுவனை வெளியே அழைத்துச் சென்றார். பின்னர் அவர்களிடம் “நீங்கள் அனைவரும் கடையில் வாங்கிய பொருட்களை தனியாக விட்டுவிட வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால், அதை ஏற்காத 14 வயது சிறுவன் தனது சகோதரியை பல தரக்குறைவான வார்த்தைகளை கூறி திட்டி, அவமானப்படுத்தியதுடன் , அவளையும் அவளது குழந்தையையும் சுடப் போவதாக மிரட்டினார். இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த 14வயது சிறுவன், மதியம் சுமார், 1:45 மணியளவில் தனது சகோதரி மார்பில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, பின்னர் துப்பாக்கியை அருகில் இருந்த முற்றத்தில் வீசிவிட்டு ஓடினார்.
இந்த துப்பாக்கி சூட்டில் 14வயது சிறுவனின் சகோதரி உயிரிழந்த நிலையில், அவர் கையில் வைத்திருந்த குழந்தைக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து துப்பாக்கியால் சுட்டப்பட்ட இளம்பெண்ணை அவர்களது குடும்பத்தினர் பால்ட்வின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார், சிறுவன் சுட்ட துப்பாக்கி குண்டு அவளது இடது கை வழியாக மார்புக்குச் சென்று, அவளது இரண்டு நுரையீரலையும் சேதப்படுத்தி இருப்பதாகவும், அதனால் ஏற்பட்ட உள் இரத்தப்போக்கு காரணமாக, அந்த இளம்பெண் மூச்சு விட முடியாமல் தவித்து உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
இந்த துப்பாக்கி சூட்டின்போது, படுகாயமடைந்த 14 வயது சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது மருத்துவமனையில் சீராக இருப்பதாகவும், அவர் மீது முதல்நிலை கொலை, சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து Pinellas-Pasco ஸ்டேட் அட்டர்னி அலுவலகம் வழக்கை மதிப்பாய்வு செய்து, டீன் ஏஜ் வயது வந்தவராக குற்றம் சாட்டப்படுமா என்பதை முடிவு செய்யும் என காவல்துறையினர் தெரிவித்து உள்ளது.