சென்னை: மேலும் பல திமுக அமைச்சர்கள் ஊழல் வழக்கில் கைதாவார்கள் என எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். திமுக ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில் ஊழல் செய்வதில்தான் சாதனை படைத்துள்ளனர் என்றும் விமர்சித்தார்.

திமுகவில் இன்னும் பல அமைச்சர்கள் ஊழல் வழக்கில் கைதாவார்கள் – எடப்பாடி பழனிசாமிதிமுகவில் இன்னும் பல அமைச்சர்கள் ஊழல் வழக்கில் கைதாவார்கள் என தமிழக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுசெயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தற்போதைய தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி  ஆட்சி காலமான  1996 முதல் 2002 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ₹50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் தமிழ்நாடு அமைச்சர் பொன்முடி குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி என அறிவிக்கப்பட்ட போது சட்டமன்ற உறுப்பினர் பதவியும் அவர் இழந்த நிலையில் இன்றைய தினம் அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்கிறார்.

சொத்துக் குறிப்பு வழக்கில் தமிழ்நாடு அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவர் மேல் முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு சிறை தண்டனை மட்டும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு கடந்த 5 மாதங்களாக சிறையில் உள்ள நிலையில், தற்போது பொன்முடியும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு உள்ளார். இது திமுகமீது கடும் விமர்சனங்களை எழுப்பி உள்ளது.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது,  அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். திமுகவில் இன்னும் பல அமைச்சர்கள் ஊழல் வழக்கில் கைதாவார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டரை ஆண்டு காலம் ஊழல் செய்தது தான் அவர்களது சாதனை என்றார்.

தொடர்ந்த பேசியவர்,  பருவமழை காலங்களில் ஒரு மாதம் முன்பே அதிமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அதிமுக ஆட்சியிலேயே அடையாறு ஆறுகள் தூர்வாரப்பட்டன. பருவமழை தொடங்குவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், இந்த பாதிப்பை குறைத்திருக்கலாம். தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பொழியும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துவிட்டது.

இது அரசுக்கும் தெரியும். சென்னையில் நடந்த விஷயத்தை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு, அங்கேயாவது நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்க வேண்டும். திமுக அரசை பொருத்தவரை கமிஷனில் தான் குறிக்கோளாக இருக்கிறார்கள். மக்களை பற்றி கவலையே படுவதுகிடையாது. மக்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் கூட வழங்கப்படவில்லை. இதெல்லாம் மக்கள் சொன்ன கருத்துதான். எதிர்க்கட்சி வேண்டுமென்று திட்டமிட்டு குறை சொல்வதாக எண்ணக் கூடாது. மக்கள் கூறிய கருத்தை ஊடகத்தின் மூலம் வெளிப்படுத்துகிறேன் என்றார்.

திமுக அரசு வெள்ள பாதிப்பு விவகாரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது, அந்த தவறை மறைக்க இந்திய வானிலைமீது பழி சுமத்துகிறது. தன்னுடைய பணியை தட்டிக் கழிக்கிறது இந்த அரசாங்கம். தூத்துக்குடிக்கு நான் நேரில் சென்று இருந்தபோது அங்கே எந்த ஒரு அமைச்சரும் கிடையாது. ஆனால் அமைச்சர்கள் அங்கேயே முகாமிட்டு பணிகளை மேற்கொள்வதாக செய்திகளும் வருகின்றன. இந்த அரசு செயலற்ற அரசாக காட்சி யளிக்கிறது. மக்களின் துன்பங்களை இந்த அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை, இது வேதனை அளிக்கிறது என்றார்.