இம்பால்
மணிப்பூர் மாநிலத்தில் இணையச் சேவை மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 3 ஆம் தேதி அன்று மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே கலவரம் வெடித்தது. சுமார் 7 மாதங்கள் ஆகியும் அங்கு இன்னும் வன்முறை ஓய்ந்தபாடில்லை.
மாநிலத்தில் கலவரம் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் வதந்திகள் மற்றும் வெறுப்பு பேச்சுகள் பரப்பப்படுவதைத் தடுக்க கடந்த மே 3-ந்தேதி இணைய சேவை துண்டிக்கப்பட்டு இந்த தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
மணிப்பூரில் இணையச் சேவைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று இரவு முடிவுக்கு வந்த நிலையில் தடையை மேலும் 5 நாட்களுக்கு நீட்டித்து மணிப்பூர் அரசு உத்தரவிட்டது. அதாவது வருகிற 5-ந்தேதி இரவு 7.45 மணி வரை இணையச் சேவைக்குத் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.