டெல்லி: மருத்துவ படிப்பில் சேர ‘பயாலஜி’ படிப்பு கட்டாயமில்லை. இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் படித்தவர் களும், பயோடெக்னாலஜி படித்தவர்களும் மருத்துவர்களாகலாம் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது பயோடெக்னாலஜியை ஆங்கிலத்துடன் கூடுதலாகப் பாடமாகப் படித்த மாணவர்கள், முறையாக அங்கீகரிக்கப்பட்ட வாரியங்களில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகும் நீட்-யுஜி தேர்வில் கலந்துகொள்ள தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பிசிஎம் (இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம்) படிப்பைத் தேர்ந்தெடுத்த மாணவர்கள் இப்போதும் நாட்டில் மருத்துவர்களாகலாம். தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) சமீபத்திய வழிகாட்டுதல்களின்படி, PCM ஸ்ட்ரீம் மாணவர்கள் 10+2 அளவில் உயிரியல்/உயிர்தொழில்நுட்பப் பரீட்சையை கூடுதலான பாடமாக எந்த அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்தும் முடித்து மருத்துவராக முடியும்.
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்பிற்கு நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு, மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வை எழுத மேல்நிலை வகுப்பில் பயாலஜி பாடம் (தாவரவியல் – விலங்கியல்) படித்திருக்க வேண்டியது கட்டாயம். ஆனால், தற்போது நீட் தேர்வில் தளர்வு செய்யப்பட்டு உள்ளது. பயாலஜி படிக்காதவர்களும் நீட் தேர்வை எழுதலாம் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்து உள்ளது. தேசிய கல்விக் கொள்கையின்படி இந்த அறிவிப்பை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது.
மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் உயிரியல் பாடப் பிரிவைத் தேர்ந்தெடுத்து அதில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது விதிமுறையாக இருந்தது. அதாவது மொழி பாடத்துடன் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிர் தொழில்நுட்பம் போன்ற பாடங்களில் தேர்ச்சி பெற்று, மருத்துவ படிப்புக்கான நீட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
ஆனால், தற்போது மத்தியஅரசு கொண்ட வந்துள்ள தேசிய கல்விக் கொள்கையின்படி, பயாலஜி படிப்பு கட்டாயமில்லை என தேசிய மருத்துவ ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 11,12 ஆம் வகுப்பில் பயாலஜி படிக்காதவர்களும் இனி மருத்துவராகலாம், தேசிய கல்விக் கொள்கையின்படி தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.