அகமதாபாத்
அகமதாபாத்தில் நடைபெற உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியைக் காணப் பிரதமர் மோடி வருவார் எனக் கூறப்படுகிறது.

தற்போது இந்தியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த வருட உலகக் கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது 19 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது. \ உலகக்கோப்பை இறுதிப்போட்டியைக் காணப் பிரதமர் மோடி நேரில் வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எனவே போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானத்திற்கு காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் 4 ஆவது டெஸ்ட் போட்டியின்போது பிரதமர் மோடி அகமதாபாத்திற்கு வருகை தந்திருந்தார். அப்போது அவர், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா வீரர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
அதைப் போல் வரும் 19 ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியைக் காணப் பிரதமர் மோடி வரலாம் என்றும், அவர் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
[youtube-feed feed=1]