மேட்டூர்

ற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம்  60.74 அடியாக உயர்ந்துள்ளது.

கடந்த சில நாட்களாகக் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு இருப்பதாலும், அணைக்கு நீர்வரத்து அதிகரித்த காரணத்தாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60.41 அடியாக இருந்த.து  தற்போது 60.74 அடியாக உயர்ந்துள்ளது. அதே சமயம் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 3,320 கன அடியில் இருந்து 3,239 கன அடியாகக் குறைந்துள்ளது.

மேட்டூர் அணையில் தற்போது 25.24 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

 

[youtube-feed feed=1]