சென்னை

போதுமான பயணிகள் இல்லாததால் சென்னை – பெங்களூரு விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது. மேற்கு-வடமேற்கு திசையில் நகர்கிறது. வரும் 16 ஆம் தேதி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 1 வாக்கில் நிலவக்கூடும்.

இன்று இதனால் இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அவ்வப்போது ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் விமான நிலையங்களுக்குப் பயணிகள் மிகவும் குறைவாகவே வந்தனர். இதனால் இன்று பெங்களூரில் இருந்து சென்னை வரும் விமானம் மற்றும் சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் விமானம் ஆகிய 2 விமானங்கள் போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டுள்ளன.