சென்னை: பாலியல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நவம்பர் 21ம் தேதி விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், ராஜேஸ்தாசுக்கு 3ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கில் ராஜேஸ்தாஸ் குற்றவாளி என விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 16ந்தேதி தீர்ப்பளித்தார். மேலும் ரூ. 20ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்
இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த நீதிமன்றம், சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தது இந்த நிலையில், ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.